செய்திகள்

பயனர்களிடம் இருந்து குறைந்தபட்ச தகவல்களையே அப்ளிகேசன்கள் சேகரிக்க வேண்டும் - ட்ராய் தலைவர்

Published On 2018-07-17 21:55 GMT   |   Update On 2018-07-17 21:55 GMT
ஆதார் அட்டை திட்டத்தின் கீழ் மக்களிடம் பெறப்பட்ட குறைந்தபட்ச தகவல்களை போலவே அப்ளிகேசன்களும் பயனர்களிடம் இருந்து குறைந்தபட்ச தகவல்களை சேகரிக்க வேண்டும் என டிராய் தலைவர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு :

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா பெங்களூரூவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :-

ஆதார் அட்டை திட்டத்தின் கீழ் மக்களின் பெயர், பிறந்த தேதி, மற்றும் முகவரி போன்ற குறைந்தபட்ச தகவல்களே மக்களிடம் இருந்து பெறப்பட்டு சேகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில அப்ளிகேசன்கள் தேவை இல்லாமல் பல்வேறு தகவல்களை பயனர்களிடம் இருந்து பெருவதை வாடிக்கையாக வைத்துள்ளது.
 
தாங்கள் அளிக்கும் தகவல்களை அப்ளிகேசன்கள் எவ்வாறு பயன்படுத்துகிறது என்ற விழிப்புணர்வும் பயனர்களிடையே இல்லை. எனவே, மக்களிடம் இருந்து தேவையில்லாத தகவல்களை பெறுவதற்கு பதிலாக ஆதார் அட்டை திட்டத்தின் கீழ் மக்கள் அளித்துள்ள குறைந்தபட்ச தகவல்களை மட்டுமே அப்ளிகேசன்கள் பெற வேண்டும். ஆனால், இதனை சட்டமாக இயற்றி செயல்படுத்தும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 
Tags:    

Similar News