செய்திகள்

கர்நாடக கனமழையால் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பிற்கும் நல்வாழ்வுக்கும் பிரார்த்திக்கிறேன் - பிரதமர் மோடி

Published On 2018-05-29 21:37 GMT   |   Update On 2018-05-29 21:37 GMT
கர்நாடகாவில் இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பிற்கும் நல்வாழ்வுக்கும் பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். #KarnatakaRain #PMModi

புதுடெல்லி:

கர்நாடகா மாநிலத்தில் கடந்த இரு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டுவரும் மீட்புப்பணிகள் குறித்து அம்மாநில முதல்வர் குமாரசாமி நேற்றிரவு ஆய்வு செய்தார். மேலும், தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட அனைவரின் பாதுகாப்பிற்காகவும், நல்வாழ்வுக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான அனைத்து மீட்புப்பணிகளையும் முடிக்கி விட அதிகாரிகளிடம் பேசியுள்ளேன்.” என மோடி கூறியுள்ளார்.



தூத்துக்குடியில் கடந்த 22-ம் தேதி நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குறித்து பிரதமர் மோடி எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #KarnatakaRain #PMModi
Tags:    

Similar News