செய்திகள்

காங்கிரஸ் கட்சிக்கு கர்நாடகா டாட்டா காட்டும் நேரம் வந்து விட்டது - பிரதமர் மோடி

Published On 2018-05-09 07:37 GMT   |   Update On 2018-05-09 07:37 GMT
கர்நாடகாவை விட்டு வெளியேறும் நேரம் காங்கிரஸ் கட்சிக்கு வந்துவிட்டது என பிரதமர் மோடி இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது கூறியுள்ளார். #KarnatakaElections #PMModi
பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகின்ற 12-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்காக பிரதமர் மோடி இன்று கோலார் நகரில் உள்ள பங்கார்பேட் பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

காங்கிரஸ் கட்சியை 6 நோய்கள் தாக்கியுள்ளது. அந்த நோய் அனைத்து இடத்திற்கும் பரவ தொடங்கியுள்ளது. அவை காங்கிரஸ் கலாச்சாரம், கம்யூனிசம், ஜாதி, குற்றம், ஊழல், ஒப்பந்த அமைப்பு ஆகியவை. இந்த 6 நோய்களும் கர்நாடகாவின் எதிர்காலத்தை தகர்த்த வல்லது.



நேற்று ஒருவர் நான் பிரதமராக போகிறேன் என கூறியுள்ளார். வரிசையில் இருப்பவர்களை தள்ளிவிட்டு, 40 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களையெல்லாம் தாண்டி நான் பிரதமராவேன் என கூறுவது அகந்தைக்கு ஆதாரமாகும். காங்கிரஸ் ஒப்பந்தங்கள் செய்வதில் மட்டுமே ஆர்வம் கொண்டுள்ளது. இதை நான் கூறவில்லை. காங்கிரஸ் எம்.பி. வீரப்ப மொய்லி தான் இதை கூறினார். மேலும், கர்நாடகாவை விட்டு வெளியேறும் நேரம் காங்கிரசிற்கு வந்துவிட்டது.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது அவரை சோனிய காந்தி பின் இருந்து இயக்கினார். ஆனால் இந்த 4 ஆண்டுகளில் நாட்டின் அனைத்து கட்டுப்பாடும் மக்கள் கையில் உள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். #KarnatakaElections #PMModi
Tags:    

Similar News