செய்திகள்

கத்துவா கற்பழிப்பு வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரிய மனுவை ஏற்றது சுப்ரீம் கோர்ட்

Published On 2018-04-26 08:18 GMT   |   Update On 2018-04-26 08:18 GMT
கத்துவா கற்பழிப்பு வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரி இரண்டு குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. #JusticeForAshifa #Kathua #KathuaCase
புதுடெல்லி:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான தடயங்களை மறைத்தும், அழித்தும் திசை திருப்பியதாக மூன்று போலீசார், ஒரு சிறுவன் உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுவன் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக சிறார் சட்டத்திற்கு உட்பட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என பாதிக்கப்பட்ட சிறுமியின் சார்பில் அவரது தந்தை தாக்கல் செய்யப்பட்ட மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.இதற்கிடையில், இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரி கைது செய்யப்பட்ட இரண்டு குற்றவாளிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், சஞ்சி ராம் மற்றும் விஷாக் ஜங்கோத்ரா தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று விசாரணைக்கு ஏற்றது. அந்த மனுவில், இந்த வழக்கு விசாரணை ஜம்மு-காஷ்மீரிலேயே நடத்தப்பட வேண்டும். மேலும், வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். #JusticeForAshifa #Kathua #KathuaCase

Tags:    

Similar News