செய்திகள்

இலவச வீடுகளில் பிரதமர் மோடி, சிவராஜ் சிங் சவுகான் உருவம் பொறித்த டைல்ஸ்

Published On 2018-04-25 10:23 GMT   |   Update On 2018-04-25 10:23 GMT
மத்தியப்பிரதேச மாநிலத்தில் இலவச வீடுகள் கட்டும் திட்டத்தில், பிரதமர் மோடி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உருவம் பொறித்த டைல்ஸ்கள் வீடுகளில் பதிக்கப்பட உள்ளன. #PMModi #ShivrajSinghChouhan
போபால்:

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தரப்படுகிறது.

மொத்தம் 2.86 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த வீடுகளில் முன்பகுதியில் உள்ள முகப்பிலும், சமையல் அறையிலும் பிரதமர் மோடி மற்றும் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் உருவம் பொறித்த செராமிக் டைல்ஸ் பதிக்கப்படுகிறது.

வீட்டின் முகப்பில் ஒன்றும், சமையல் அறையில் ஒன்றுமாக 2.86 லட்சம் வீடுகளிலும் பதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.#PMModi #ShivrajSinghChouhan
Tags:    

Similar News