செய்திகள் (Tamil News)

ரத்த தானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொள்ளும் வாலிபர்

Published On 2018-04-19 11:43 GMT   |   Update On 2018-04-19 11:43 GMT
டெல்லியைச் சேர்ந்த கிரண் வர்மா ரத்த தானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். #SimplyBlood #ChangeWithOneWalk #DonateBlood #SaveLives
புதுடெல்லி:

டெல்லியைச் சேர்ந்த கிரண் வர்மா தனது நண்பர்களுடன் இணைந்து 'சிம்பிளி பிளட்' என்ற ரத்த தான இணையதளத்தை தொடங்கினார். ரத்த தானம் செய்வது மட்டும் முக்கிய இல்லை. அதனை கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை தடுத்து பயனாளிகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பது அவர்களுடைய நோக்கமாக இருந்தது. இதனால் ஆன்லைனில் ரத்த தானம் செய்ய செயலி ஒன்றை உருவாக்கினர்.

இந்த செயலியில் பல நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரம் பேர் ரத்த தானம் செய்ய தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். இதனால் ரத்தம் தேவைப்படும் போது அதை தெரிவித்தால் குறிப்பிட்ட ரத்த பிரிவினர் தானம் செய்து உயிரைக்காப்பற்ற முடியும். இதன் மூலம் பலரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.


இந்நிலையில், கிரண் வர்மா மேலும் பலர் ரத்த தானம் செய்ய தங்கள் பெயரை இணைக்க விரும்பினார். அதனால் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பினார். அதனால் இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். ஜனவரி மாதம் காஷ்மீரிலிருந்து தொடங்கிய தனது பயணத்தை அடுத்த ஆண்டு நிறைவு செய்வார். ஸ்ரீநகரிலிருந்து உதய்ப்பூர், சென்னை, பெங்களூர் வழியாக கொச்சி சென்றடைந்துள்ளார். இந்த பயணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.  #SimplyBlood #ChangeWithOneWalk #DonateBlood #SaveLives

Tags:    

Similar News