செய்திகள்

மெக்கா மசூதி தாக்குதல் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதியின் ராஜினாமா நிராகரிப்பு

Published On 2018-04-19 07:28 GMT   |   Update On 2018-04-19 07:28 GMT
ஐதராபத் மெக்கா மசூதி தாக்குதல் வழக்கில் தீர்ப்பு வழங்கிய தேசிய புலணாய்வு முகமை கோர்ட் நீதிபதி ரவீந்திர ரெட்டியின் ராஜினாமாவை ஐகோர்ட்டு நிராகரித்து விட்டது. #MeccaMasjidVerdict
ஐதராபாத்:

ஐதராபாத் மெக்கா மசூதியில் கடந்த 2007-ம் ஆண்டு மே 8-ந்தேதி நடந்த குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர். 58 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கு விசாரணை ஐதராபாத்தில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு கோர்ட்டில் நடந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட சுவாமி அசீமானந்த் உள்பட 5 பேரையும் விடுதலை செய்து நீதிபதி ரவீந்தர் ரெட்டி தீர்ப்பளித்தார்.

அதைதொடர்ந்து தீர்ப்பளித்த சில மணி நேரத்தில் தனது பதவியை திடீரென அவர் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை ஐதராபாத் ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி ரமேஷ் ரங்கநாதனிடம் சமர்ப்பித்தார். ஆனால் அவரது ராஜினாமாவை ஏற்க ஐகோர்ட்டு மறுத்து நிராகரித்து விட்டது. அவர் தொடர்ந்து பணியாற்றவும் வலியுறுத்தி உள்ளது.
Tags:    

Similar News