செய்திகள் (Tamil News)

வாடிக்கையாளர்கள் பணம் பத்திரமாக உள்ளது - பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்

Published On 2018-02-19 14:47 GMT   |   Update On 2018-02-19 14:47 GMT
குஜராத்தைச் சேர்ந்த நிரவ்மோடி பணமோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடியுள்ள நிலையில், வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கமளித்துள்ளது. #PNBScam
புதுடெல்லி:

குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ்மோடி உலகம் முழுவதும் தனது கடைகளை வைத்துள்ளார். இந்நிலையில், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக்கிளையில் ரூ.11 ஆயிரம் கோடி மோசடி செய்து வெளிநாட்டுக்கு அவர் தப்பி ஓடிவிட்டார்.

அவர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. நாடுமுழுவதும் உள்ள நிரவ் மோடி கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இந்நிலையில், இந்த நிகழ்வுகளால் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதனை அடுத்து, வாடிக்கையாளர்களின் பணம், நிரந்தர வைப்பு நிதிகள் பத்திரமாக உள்ளதாகவும் இதனால், வாடிக்கையாளர்கள் அச்சப்பட தேவையில்லை என வங்கி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PNBScam #PunjabNationalBank
Tags:    

Similar News