செய்திகள்

3 மாத குழந்தையின் வயிற்றில் வளர்ந்து வந்த கரு அறுவை சிகிச்சை மூலம் நீக்கம்

Published On 2017-12-15 12:15 GMT   |   Update On 2017-12-15 12:15 GMT
பீகாரில் 3 மாத குழந்தையின் வயிற்றில் வளர்ந்து வந்த கருவை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
பாட்னா:

பீகார் மாநிலத்தில் மூன்று மாத குழந்தை ஒன்று வயிற்றினுள் கட்டி இருப்பதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. குழந்தையை சோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

குழந்தையின் வயிற்றில் இருப்பது கட்டியல்ல, அது பாதி வளர்ச்சியடைந்த நிலையில் உள்ள மற்றொரு குழந்தை என்பது தெரிய வந்தது. அந்த குழந்தைக்கு கண்கள் மற்றும் தோல்கள் வளர்ச்சியடைந்து இருந்தன. இந்த கருவானது குழந்தையின் சிறுநீரகத்தில் வளர்ந்து கொண்டிருந்தது. அதனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்தனர்.
 
வயிற்றில் இருந்த குழந்தை 1 கிலோ எடை இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது போன்று 200 சம்பவங்கள் உலகில் இதுவரை நடந்துள்ளது.

குழந்தையின் வயிற்றில் வளர்ந்த மற்றொரு கருவை மருத்துவர்கள் அகற்றியது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News