செய்திகள்

எப்படிப்பட்ட பிரச்சனையையும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயாராக உள்ளது: ஜிதேந்திர சிங்

Published On 2017-10-20 13:47 GMT   |   Update On 2017-10-20 13:47 GMT
எல்லையில் எப்படிப்பட்ட பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயாராக உள்ளது என மத்திய இணை மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர்:

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சமூக நலத்துறை சார்பில் ‘முண்டாசிர்’ என்ற குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த குறும்பட வெளியீட்டு வீழாவில் மத்திய இணை மந்திரி ஜிதேந்திர சிங் கலந்துகொண்டார். அந்த குறும்படத்தை வெளியிட்டு அவர் பேசியதாவது:-

முதியவர்களின் பிரச்சனைகளை சரிசெய்ய பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பிரதமர் மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டுள்ளது. முதன்முறையாக அரசு வேலைகளில் பணிபுரியாதவர்கள் கூட ஒரு வயதுவரம்பை எட்டிய பின்னர் ஓய்வூதியம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அனைத்து முதியோருக்கு ஓய்வூதியம் அளிக்கும் சமூகமாக விரைவில் இந்தியா மாறும்.

அதே நேரத்தில் தீவிரவாதம் தொடர்புடைய சம்பவங்களும் மிகவும் வெற்றிகரமாக தீர்க்கப்பட்டுள்ளன. ஜம்மு - காஷ்மீரில் உள்ள நமது பாதுகாப்பு படைகள் எந்த அச்சுறுத்தலையும் சமாளிக்க போதுமானதாக உள்ளன. சர்வதேச எல்லையிலும், கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியிலும் உள்ள துருப்புக்கள் ஊடுருவல் பிரச்சனைகளில் திறம்பட செயல்படுகின்றன.

இவ்வாறு அவர் பேசினார். 

தீவிரவாதிகளுக்கு எதிராக போராடிவரும் ஜம்மு - காஷ்மீர் போலீசாருக்கும் அவர் தனது பாராட்டை தெரிவித்துக் கொண்டார். பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள இளைஞர்களை தவறாக வழிநடத்துகின்ற தேசிய விரோத சக்திகளுக்கு கண்டனம் தெரிவித்தார்.
Tags:    

Similar News