செய்திகள்

ஜனாதிபதி மாளிகையில் சி.ஏ.ஜி புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார் ராஜிவ் மஹ்ரிஷி

Published On 2017-09-25 05:21 GMT   |   Update On 2017-09-25 05:21 GMT
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கணக்கு மற்றும் தணிக்கை துறை புதிய தலைவராக ராஜிவ் மஹ்ரிஷி பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதுடெல்லி:

இந்தியாவின் மிக முக்கியமான தன்னாட்சி அந்தஸ்து பெற்ற மத்திய கணக்கு மற்றும் தணிக்கை (சி.ஏ.ஜி) அமைப்பானது அரசால் கொண்டுவரப்படும் அனைத்து திட்டங்களுக்குமான வரவு மற்றும் செலவுகளை சரிபார்க்கிறது. இந்த கணக்கு அறிக்கையை பாராளுமன்றம் மற்றும் அந்தந்த மாநில சட்டசபைகளில் தாக்கல் செய்கிறது.

இந்த அமைப்பின் தற்போதைய தலைவராக உள்ள சஷிகாந்த சர்மாவின் பதவிக்காலம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இதனையடுத்து, மத்திய உள்துறை அமைச்சக செயலாளராக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற ராஜீவ் மஹ்ரிஷி சி.ஏ.ஜி.யின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ராஜின் மஹ்ரிஷிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News