செய்திகள்

சசிகலா வீடியோ கிராபிக்ஸ் செய்து வெளியிடப்பட்டுள்ளது: புகழேந்தி

Published On 2017-08-21 05:39 GMT   |   Update On 2017-08-21 05:39 GMT
பாகுபலி பட கிராபிக்ஸ் போல சசிகலா வீடியோ காட்சிகளை கிராபிக்ஸ் செய்து வெளியிட்டு உள்ளனர். இது உண்மையான வீடியோ கிடையாது என புகழேந்தி கூறியுள்ளார்.
பெங்களூரு:

பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா வெளியே சென்று விட்டு சிறைக்கு பையுடன் வரும் புதிய வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ காட்சியை டி.ஐ.ஜி. ரூபா வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து கர்நாடக மாநில அ.தி.மு.க. அம்மா அணி செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி கூறியதாவது:-

ஏற்கனவே ஒரு வீடியோ காட்சி வெளியிடப்பட்டது. தற்போது இன்னொரு வீடியோ காட்சியை வெளியிட்டு உள்ளனர். இரண்டுமே ஒரே வீடியோதான். ஒவ்வொரு திசையில் இருந்து எடுக்கப்பட்டு வெளியிடப்பட்ட வீடியோ காட்சி ஆகும்.


பாகுபலி பட கிராபிக்ஸ் போல இந்த வீடியோ காட்சிகளை கிராபிக்ஸ் செய்து வெளியிட்டு உள்ளனர். இது உண்மையான வீடியோ கிடையாது. வேண்டும் என்றே திட்டமிட்டு யாரோ இந்த வீடியோ காட்சியை வெளியிட்டு உள்ளனர். சசிகலா புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News