செய்திகள்

வங்கிகளில் சந்தேகத்துக்குரிய பண பரிமாற்றம்: 2015-2016-ம் நிதி ஆண்டில் ரூ.562 கோடி பறிமுதல்

Published On 2017-07-30 23:22 GMT   |   Update On 2017-07-30 23:22 GMT
வங்கிகளில் சந்தேகத்துக்குரிய முறையில் ரூ.562 கோடி கருப்பு பணம் கைப்பற்றப்பட்டது என்று மத்திய அரசு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

வங்கிகளில் சந்தேகத்துக்குரிய பண பரிமாற்றம் குறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிதித்துறை புலனாய்வு பிரிவுக்கு அறிக்கை அனுப்புமாறு வங்கிகளுக்கு ஏற்கனவே அறிக்கை அனுப்பப்பட்டு இருந்தது. அதை ஏற்று, 2015-2016-ம் நிதி ஆண்டில் இதுபற்றி பெறப்பட்ட அறிக்கைகள் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்தது. அதுபோல், கள்ள நோட்டு குறித்த அறிக்கைகள் எண்ணிக்கை 16 சதவீதமும், பயங்கரவாதத்துக்கு எல்லை தாண்டி கிடைத்த நிதி உதவி குறித்த அறிக்கைகள் எண்ணிக்கை 850 சதவீதமும் அதிகரித்தது.

இதன்மூலம் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதில், ரூ.562 கோடி கருப்பு பணம் கைப்பற்றப்பட்டது என்று மத்திய அரசு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News