செய்திகள்

சொத்து குவிப்பு வழக்கு: இமாசலபிரதேச முதல்-மந்திரி மனைவியுடன் கோர்ட்டில் ஆஜர்

Published On 2017-05-22 07:53 GMT   |   Update On 2017-05-22 07:53 GMT
ரூ.10 கோடி சொத்து குவிப்பு வழக்கில் இமாசலபிரதேச பிரதேச முதல்-மந்திரி வீரபத்ரசிங், அவரது மனைவியுடன் டெல்லி சிறப்பு கோர்ட்டில் இன்று ஆஜரானார்.
புதுடெல்லி:

இமாசலபிரதேச முதல்- மந்திரி வீரபத்ரசிங் மத்திய மந்திரியாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் கூறப்பட்டது.

வருமானத்துக்கு அதிகமாக ரூ.10 கோடி சொத்து குவித்ததாக வீரபத்ரசிங், அவரது மனைவி பிரதீபா உள்பட 9 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. ஊழல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவாகி இருந்தது.



இதுதொடர்பான வழக்கு டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சி.பி.ஐ. 500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருந்தது. 225 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு இருந்தனர். 442 ஆவணங்கள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு இருந்தது.

ரூ.10 கோடிக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் வீரபத்ரசிங் மற்றும் அவரது மனைவி பிரதீபா இன்று டெல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார்கள். கோர்ட்டு கடந்த மாதம் 8-ந்தேதி பிறப்பித்த உத்தரவு காரணமாக அவர்கள் கோர்ட்டில் ஆஜரானார்கள். இதேபோல மற்றவர்களும் கோர்ட்டில் ஆஜரானார்கள்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தனர். இதற்கு சி.பி.ஐ. காலஅவகாசம் கேட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு வருகிற 29-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
Tags:    

Similar News