செய்திகள்

பிரதமர் மோடியுடன் சச்சின் டெண்டுல்கர் திடீர் சந்திப்பு

Published On 2017-05-19 07:00 GMT   |   Update On 2017-05-19 07:00 GMT
சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ் திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சச்சின் டெண்டுல்கர் இன்று சந்தித்துள்ளார்.
புதுடெல்லி:

கிரிக்கெட் கடவுள் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். அவருடைய வாழ்க்கை வரலாறு ‘சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்’ பெயரில் திரைப்படமாக வருகின்ற மே 26-ம் தேதி வெளிவர உள்ளது.

சச்சின் வாழ்க்கை படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். புகழ்பெற்ற இந்தியர்களான சச்சின் மற்றும் ரகுமான் இணைந்துள்ள இப்படம் உலகம் முழுவதுமே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ் திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சச்சின் டெண்டுல்கர் இன்று சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ் திரைப்படம் குறித்து மோடியிடம் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News