செய்திகள்

பெட்ரோல் விலை 1 ரூபாய் 39 பைசா, டீசல் விலை 1 ரூபாய் 4 பைசா உயர்வு

Published On 2017-04-15 18:57 GMT   |   Update On 2017-04-15 18:57 GMT
பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 39 காசுகளும், டீசல் விலை 1 ரூபாய் 4 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், இந்திய ரூபாய் மதிப்பில் உள்ள ஏற்ற இறக்கங்களின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள மாற்றியமைத்து வருகின்றன. ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி மற்றும் மாத இறுதி நாளில் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் சர்வதே சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலியாக பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 39 காசுகளும், டீசல் விலை 1 ரூபாய் 4 காசுகளும் உயர்த்தி எண்ணெய் நிறுவங்கள் அறிவித்துள்ளன. நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும்.

இதற்கிடையே, மே 1-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றம் கொண்டு வரும் முறை அமலுக்கு வருகிறது. அதன்படி, முதல் கட்டமாக புதுச்சேரி, விசாகப்பட்டணம், ஆந்திரா,  உதய்பூர்,  ஜாம்ஷெட்பூர் மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் இந்த திட்டம் வருகிறது. இதன் பிறகு மற்ற பகுதிகளுக்கும், இந்த நடைமுறை அமல்படுத்தப்படும்.

Similar News