செய்திகள்

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவால் அசைவமின்றி தவிக்கும் மாணவர்கள்

Published On 2017-03-30 13:55 GMT   |   Update On 2017-03-30 13:55 GMT
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவால், கல்லூரி மாணவர்கள் அசைவமின்றி தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லக்னோ:

உத்தரபிரதேசத்தில் புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்ற யோகி ஆதித்ய நாத் அனுமதி இல்லாத ஆடு, மாடு வெட்டும் கூடங்கள், இறைச்சி கடைகள் ஆகியவற்றை மூட உத்தரவிட்டார். இதனை எதிர்த்து இறைச்சி விற்பனையாளர்களும், அசைவ உணவகங்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.இதனால் திருமணங்களிலும் அசைவத்திற்குப் பதிலாக சைவ சாப்பாடு பரிமாறப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில், முதல்வர் உத்தரவால் கல்லூரி மாணவர்கள் அசைவமின்றி தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் பல்கலை மாணவர்களுக்கு அசைவ உணவு வழங்க முடியாததால் சைவ உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் விரக்தி அடைந்துள்ளதாக பல்கலைக்கழக உணவக பொறுப்பாளர் இம்தியாஸ் அலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் “தொடர்ந்து 3-4 நாட்களாக சைவ உணவை வழங்கி வருகிறோம். இதனால் மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்” என்றார்.

Similar News