செய்திகள்

குஜராத் கோஷ்டி மோதலில் 30 வீடுகளுக்கு தீவைப்பு - போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

Published On 2017-03-26 00:22 GMT   |   Update On 2017-03-26 00:22 GMT
குஜராத்தில் இரு பிரிவினருக்கு இடையே நிகழ்ந்த கோஷ்டி மோதலில் 30 வீடுகளுக்கு தீவைக்கப்பட்ட சம்பவத்தில் நிகழ்ந்த போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்
ஆமதாபாத்:

குஜராத் மாநிலம் பதான் தாலுகா வதாவாலி கிராமத்தில் நேற்று உயர்நிலைப்பள்ளி தேர்வு எழுதிய 2 மாணவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் இந்த தகராறு முற்றி இரு சமூகங்களுக்கு இடையே மோதலாக மாறியது. சுற்றுவட்டார 3 கிராமங்களை சேர்ந்த இரு பிரிவினரும் சரமாரியாக கற்களால் தாக்கிக்கொண்டனர். ஒரு சமூகத்தை சேர்ந்த 30 வீடுகளுக்கு ஒரு கும்பல் தீவைத்தது. இதில் அந்த வீடுகளும், 25 வாகனங்களும் எரிந்தன. 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்துவந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

கலவரத்தை கட்டுப்படுத்த பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தினர் கலையாததால் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் ஒரு இளைஞர் குண்டு பாய்ந்து இறந்தார். 12-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். மாலையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டதும் கலவரம் கட்டுக்குள் வந்தது. 

Similar News