செய்திகள்

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு ஒரு லட்சம் ரூபாய் மானியம்: யோகி ஆதித்யநாத் வாக்குறுதி

Published On 2017-03-25 14:58 GMT   |   Update On 2017-03-25 14:58 GMT
கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்வோருக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என உ.பி.யின் புதிய முதல்வர் யோகி ஆதித்யநாத், தனது முதல் பொதுக்கூட்டத்தில் வாக்குறுதி அளித்துள்ளார்.
லக்னோ:

உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து யோகி ஆதித்யநாத், முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவியேற்ற பிறகு முதல் முறையாக இன்று தனது சொந்த ஊரான கோரக்பூர் சென்றார். கோரக்பூரில் உள்ள தனியார் கல்லூரி விழாவில் கலந்துகொண்ட அவர் பேசியதாவது:

உத்தர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். உத்தர பிரதேச வளர்ச்சிக்கு தமது அரசு முழு வீச்சில் பாடுபடும். பிரதமர் மோடியின் தொலை நோக்கு திட்டங்கள் நிறைவேற்றப்படும். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

ஈவ் டீசிங் செய்பவர்கள், பெண்கள் பின்னால் சுற்றும் இளைஞர்களை பிடிப்பதற்காக உத்தரப்பிரதேச மாநில காவல் துறையில் ‘ஆன்ட்டி ரோமியோ’ என்ற பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடும் வாலிபர்களை பிடித்து போலீசார் முழு வீச்சில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நான் கோரக்பூர் தொகுதியை தற்போது இழந்திருக்கலாம். ஆனால், மக்கள் பிரச்சனைகளை தீர்க்க பாடுபடுவேன். பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளுக்கு அப்பால் நான் வேறு எந்த புதிய முடிவும் எடுக்கப்படமாட்டாது என உறுதி அறிக்கிறேன்.

கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்ல விரும்புவோர், நல்ல உடல் நலத்துடன் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும். லக்னோ, காசியாபாத் அல்லது நொய்டாவில் மானசரோவர் பவன் கட்டமைக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News