செய்திகள்

தாயின் அணைப்பு குழந்தையின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்

Published On 2017-03-24 11:31 GMT   |   Update On 2017-03-24 11:31 GMT
தாயின் அணைப்பு குழந்தையின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கும் என புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
புது டெல்லி:

குழந்தைகளுக்கான டயாப்பர் தயாரிக்கும் ஹக்கீஸ் நிறுவனம் சமீபத்தில் நாடு முழுவதும் 2000 தாய்மார்கள் 500 மருத்துவ நிபுணர்களிடம் ஆய்வொன்றை நடத்தியது. தாய்-குழந்தைக்கிடையான அணைப்பு குறித்தும் அதனுடைய பலன்கள் குறித்தும் அறிந்து கொள்வதற்காக இந்த ஆய்வை அந்நிறுவனம் நடத்தியது.



இதில் தாயின் அணைப்பு குழந்தையின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் என 76% மருத்துவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். தாய் அணைக்கும்போது குழந்தையின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையடைகிறது, ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறது என்று ஹக்கீஸ் நிறுவனம் இந்த ஆய்வின் முடிவுகள் குறித்து தெரிவித்துள்ளது. இதுதவிர குழந்தையின் அழுகை மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றையும் தாயின் அணைப்பு குறைப்பதாக கூறப்படுகிறது.

தங்களின் அணைப்பு குழந்தைகளின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் என்பதை 85% தாய்மார்கள் அறிந்திருக்கவில்லை என, இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

Similar News