செய்திகள்

பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு மோடி மீண்டும் அறிவுரை

Published On 2017-03-24 06:37 GMT   |   Update On 2017-03-24 06:37 GMT
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் அறிவுரை வழங்கியுள்ளார். அரசு ஊழியர்கள் நியமனம் மற்றும் இடமாற்றம் விவகாரங்களில் ஒருபோதும் தலையிடாதீர்கள் என அவர் கூறியுள்ளார்.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு திடீர் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டார்.

பாராளுமன்ற சபை நடவடிக்கைகளுக்கு சரியாக தினமும் வந்து பங்கேற்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 74 பா.ஜ.க. எம்.பி.க்களை சந்தித்து பேசினார். சுமார் 2 மணி நேரம் அவர் எம்.பி.க்களுடன் சகஜமாக உரையாடினார்.

அப்போது அவர் பா.ஜ.க. எம்.பி.க்கள் உத்தரபிரதேச மக்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும்? எவற்றையெல்லாம் செய்யக்கூடாது என்பது பற்றி பேசினார். இந்த உரையாடலுக்கு இடையே சில அறிவுரைகளையும், மோடி பா.ஜ.க. எம்.பி.க்களிடம் கூறினார்.

அரசு ஊழியர்கள் நியமனம் மற்றும் இடமாற்றம் விவகாரங்களில் ஒருபோதும் தலையிடாதீர்கள். கடந்த ஆட்சிக் காலத்தில் இதை அவர்கள் ஒரு தொழில் போல செய்தனர். நாம் அந்த கலாசாரத்தை மாற்ற வேண்டும்” என்று பிரதமர் மோடி எம்.பி.க்களிடம் கேட்டுக்கொண்டார்.


மேலும் அவர் கூறுகையில், “பா.ஜ.க. எம்.பி.க்கள் அப்படியே தேவை இல்லாத வி‌ஷயங்களில் தலையிடுவதை விடுத்து, தோல்வி அடைந்த இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதன்மூலம் நிர்வாகத்தை தூய்மைப்படுத்த முடியும் என்றார்.

மக்களிடம் பழக வேண்டும். அவர்களது அடிப்படை தேவைகளை தீர்த்து வைக்க உரிய நடவடிக்கைகளை உடனுக்குடன் எம்.பி.க்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

Similar News