செய்திகள்

இறக்குமதி செய்யப்படும் கோதுமைக்கு வரி விதிக்க மத்திய அரசு பரிசீலனை

Published On 2017-03-23 03:41 GMT   |   Update On 2017-03-23 03:41 GMT
இறக்குமதி செய்யப்படும் கோதுமைக்கு வரி விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக மத்திய வேளாண் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

மத்திய அரசு மதிப்பீடுகளின்படி, கடந்த 2015-16 வேளாண் பருவத்தில் (ஜூலை-ஜூன்) 9.23 கோடி டன் கோதுமை உற்பத்தி ஆகி இருந்தது. நடப்பு பருவத்தில் இது 9.66 கோடி டன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புது கோதுமை சந்தைகளுக்கு வரும் நிலையில் அதிக சப்ளை காரணமாக விலை குறைய வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகள் உரிய விலை கிடைக்காமல் பாதிக்கப்படுவர்.

இன்றைய நிலையில் மத்திய அரசு கோதுமை இறக்குமதி மீது வரி விதிப்பதில்லை. எனினும் ரபி பருவ உற்பத்தி அடிப்படையில் இந்த வரி மீண்டும் கொண்டு வரப்படும் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இதனை உறுதி செய்யும் வகையில் இப்போது மீண்டும் இறக்குமதி கோதுமைக்கு வரி விதிக்க மத்திய அரசு ஆயத்தமாகி உள்ளது. கோதுமை உற்பத்தி அமோகமாக இருக்கும் என்பதால் மறுபடியும் வரி விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய வேளாண் துறை அமைச்சகத்தின் செயலாளர் ஷோபனா கே. பட்நாயக் கூறி உள்ளார்.

மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோக துறை எதிர்வரும் 2017-18 சந்தை பருவத்தில் (ஏப்ரல்-மாரச்) 3.30 கோடி டன் கோதுமை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.

Similar News