செய்திகள்

வங்கி கடனை செலுத்தாததால் ஆந்திர மந்திரியின் சொத்துக்கள் பறிமுதல்

Published On 2017-02-23 05:57 GMT   |   Update On 2017-02-23 05:57 GMT
வங்கி கடனை செலுத்தாததால் ஆந்திர கல்வி மந்திரியின் சொத்துக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நகரி:

ஆந்திர மாநில கல்வி மந்திரியாக இருப்பவர் கன்டா சீனிவாசராவ். இவர் கடந்த 2005-ம் ஆண்டு தனது உறவினர்களுடன் சேர்ந்து விசாகப்பட்டினத்தில் கம்பெனி ஒன்றை தொடங்கினார்.

இதற்காக அவரும், உறவினர்களும் தங்களது சொத்துக்களை இந்தியன் வங்கியில் அடமானம் வைத்து ரூ.141.68 கோடி கடன் வாங்கினர். ஆனால் கடனை சரியாக கட்டாததால் வட்டியுடன் ரூ.196 கோடி ஆனது. இதையடுத்து வங்கிகள் பலமுறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அவர்கள் கடனை கட்டவில்லை. இதனால் மந்திரி மற்றும் உறவினர்கள் அடமானம் வைத்த சொத்துக்களை இந்தியன் வங்கி ஜப்தி செய்தது.

மந்திரி சீனிவாசராவுக்கு சொந்தமான சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள பிளாட், ஆந்திராவில் சொத்துக்கள் இதில் அடங்கும்.

Similar News