செய்திகள்

பிரதமர் பெயரை பயன்படுத்தி மோசடி - உ.பி.யில் 2 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு

Published On 2017-01-28 00:19 GMT   |   Update On 2017-01-28 00:19 GMT
உத்திரபிரதேசத்தில் பிரதமர் பெயரை பயன்படுத்தி மோசடி செய்தது தொடர்பாக சி.பி.ஐ., இருவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தது.
உத்திரபிரதேசத்தில் பிரதமர் பெயரை பயன்படுத்தி மோசடி செய்தது தொடர்பாக சி.பி.ஐ., இருவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தது.

புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் என்ற பகுதியை சேர்ந்தவர்கள் அதுல் குமார், ஜக்மோகன்சிங். இவர்கள் இருவரும், பிரதமர் நரேந்திர மோடி பெயரில் ஒரு இணையதளத்தை தொடங்கினார்கள்.

அதில், பள்ளிக்கூட சீட், குடியுரிமை போன்றவற்றை பெற்றுத் தருவதாக விளம்பரம் செய்தனர். இதற்கான பணத்தை வரைவோலையாக அளிக்குமாறும் தெரிவித்தனர். அவர்கள் பிரதமர் பெயரை பயன்படுத்தி, பொதுமக்களை ஏமாற்ற முயற்சிப்பதாக புகார் எழுந்தது.

இதன்பேரில், பூர்வாங்க விசாரணை நடத்திய சி.பி.ஐ., அதுல் குமார், ஜக்மோகன்சிங் ஆகிய இருவர் மீதும் நேற்று மோசடி வழக்கு பதிவு செய்தது. 2 பேரின் அலுவலகங்களிலும் நடத்தப்பட்ட சோதனையில், சர்ச்சைக்குரிய ஆவணங்கள் சிக்கின.

Similar News