செய்திகள்

கோவாவில் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிக்க 90 நாளில் நடவடிக்கை: ஆம் ஆத்மி கட்சி உறுதி

Published On 2017-01-26 10:43 GMT   |   Update On 2017-01-26 10:43 GMT
கோவா மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் உள்ள ஊழலை ஒழிக்க 90 நாட்களில் திட்டம் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்படும் என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
பனாஜி:

கோவா மாநிலத்தில் வரும் பிப்ரவரி 4-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உளள்து. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது. வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், கட்சியின் முதல்வர் வேட்பாளர் எல்விஸ் கோம்ஸ் பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கோவா மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் உள்ள ஊழலை ஒழிப்பதற்கு 90 நாட்களில் அமைப்புமுறை கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்படும். இதற்காக கண்காணிப்பை அதிகரிப்பது, மின்னணு ஆளுகையை அறிமுகம் செய்வது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்படும்.

இரண்டு முக்கிய பிரச்சினைகளை 90 நாட்களில் முன்வைக்க வேண்டும். ஒட்டுமொத்த நடமுறைகளும் தீவிரமாகும்போது, பொதுமக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையிலான இன்டர்பேஸ் குறையும். இன்டர்பேஸ் குறைந்தால் ஊழல் வெளியேறத் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News