செய்திகள்

காஷ்மீர் பண்டிட்களை மீள்குடியமர்த்த ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம்

Published On 2017-01-19 12:40 GMT   |   Update On 2017-01-19 12:40 GMT
காஷ்மீர் பண்டிட்களை பள்ளத்தாக்கு பகுதியில் மீண்டும் குடியமர்த்த ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 1989-ம் ஆண்டு நடைபெற்ற வன்முறையை தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான காஷ்மீர் பண்டிட்கள் வெளியேறினர். 

வெளியேறிய காஷ்மீர் பண்டிட்டுகளை மீள்குடியேற்றம் செய்யும் விவகாரம்தான் ஜம்மு-காஷ்மீரில் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்னையாக நிலவி வருகிறது.

இந்நிலையில், காஷ்மீர் பண்டிட்களை பள்ளத்தாக்கு பகுதியில் மீண்டும் குடியமர்த்த ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

முதலமைச்சர் மெகபூபா முப்தி தலைமையிலான அரசு இந்த இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. நீண்ட காலமாகவே மெகபூபா இந்த விவகாரத்திற்கு ஆதரவு தெரித்து வந்தார்.

இந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்த சபாநாயகர் கவேந்திரா குப்தா, பண்டிட்கள் பாதுகாப்புடன் மீள் குடியமர்வு செய்வது உறுதி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Similar News