செய்திகள்

டிவி நிகழ்ச்சியில் தேசவிரோத கருத்து: பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மீது வழக்கு

Published On 2016-12-03 16:06 GMT   |   Update On 2016-12-03 16:06 GMT
தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது தேசவிரோத கருத்துக்களை தெரிவித்ததாக பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பதான்:

உத்தர பிரதேச மாநிலம் பதான் மாவட்டம் மிரா சராய் பகுதியைச் சேர்ந்த பண்டு கான் என்பவர் பதான் தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தனது புகார் மனுவில், நவம்பர் 25-ம் தேதி வெளியான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தேசவிரோத கருத்துக்களை கூறியதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா ஆகியோர் மீது புகார் கூறியிருந்தார். இந்த மனுவை டிசம்பர் 14-ம்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி அறிவித்துள்ளார்.

இவ்வழக்கு குறித்து மனுதாரரின் வழக்கறிஞர் கூறும்போது, ‘‘நவம்பர் 25-ம் தேதி முன்னணி செய்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய பரூக் அப்துல்லா தேசவிரோத கருத்துக்களை தெரிவித்தார். அவரது கருத்துக்கள் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு தீங்கு செய்யும் வகையில் உள்ளது. வெறுப்புணர்வை தூண்டுவதாகவும் இருக்கிறது.

அதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உமர் அப்துல்லா, தனது தந்தை இவ்வாறு பேசியதை தடுக்க நினைக்கவில்லை’’ என்று குற்றம்சாட்டினார்.

Similar News