செய்திகள்

6 ஜிபி ரேம் கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா லென்ஸ் கிடையாது

Published On 2016-12-03 15:09 GMT   |   Update On 2016-12-03 15:09 GMT
சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் அதிகளவு ரேம் மற்றும் இன்டர்னல் மெமரி வழங்கப்படுவதால் டூயல் கேமரா லென்ஸ் வழங்கப்படும் வாய்ப்புகள் குறைவு என்றே கூறப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன் குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகின. இந்நிலையில் S8 ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா லென்ஸ் வழங்கப்படாது என்றே தெரிகிறது.

சாம்சங் S8 ஸ்மார்ட்போனில் கேமரா சார்ந்த மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்படும் என சாம்சங் அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் S8 கருவியில் டூயல் லென்ஸ் கொண்ட கேமரா அமைப்பு இடம்பெறும் என கூறப்பட்டது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சாம்சங் நிறுவனம் டூயல் கேமரா லென்ஸ் திட்டத்தை கைவிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.    

இத்துடன் மெமரி அளவுகளை பொருத்த வரை கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனில் 6 GB அளவு ரேம் மற்றும் 256 GB இன்டர்னல் மெமரி வழங்கப்படலாம் என சீனாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து வகை பயன்பாடுகளுக்கும் உகந்ததாக இருக்கும். மற்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.1 இன்ச் டிஸ்ப்ளே, சூப்பர் AMOLED டச் ஸ்கிரீன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 830 எக்சைனோஸ் சிப்செட் வழங்கப்படலாம்.

கேமராவை பொருத்த வரை 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ், மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படலாம். இத்துடன் அழகிய புகைப்படங்களை எடுக்க உதவும் கேமரா அம்சங்கள் மற்றும் இதர சென்சார்களும் இடம் பெறும். கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை எல்டிஇ, வை-பை, A-GPS, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி ஐரிஸ் ஸ்கேனர், கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளன.  

சரியான பேட்டரி அளவு குறித்த தகவல் ஏதும் இல்லையென்றாலும் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் மற்றும் நான்கு வித நிறங்களில் வெளியாகலாம்.

Similar News