செய்திகள்

நரேந்திர மோடி ஆப் மூலம் பல லட்சம் பேரின் தரவுகள் அம்பலமாகும் அபாயம்

Published On 2016-12-02 10:53 GMT   |   Update On 2016-12-02 10:53 GMT
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ செயலியான நரேந்திர மோடி ஆப் பயனர்களின் தகவல்களை பாதுகாக்க தவறி விட்டது என மும்பை டெவலப்பர் ஜாவேத் காத்ரி என்பவர் குற்றம் சாட்டிள்ளார்.
மும்பை:

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ செயலியான நரேந்திர மோடி ஆப் பயனர்களின் தகவல்களை பாதுகாக்க தவறி விட்டது என மும்பை டெவலப்பர் ஜாவேத் காத்ரி என்பவர் குற்றம் சாட்டிள்ளார். அதன் படி நரேந்திர மோடி ஆப்பை தங்களின் ஸ்மார்ட்போனில் டவுன்லோடு செய்திருக்கும் பல லட்சம் பயனர்களின் தகவல்களை பாதுகாக்கும் அளவு திறன் வாய்ந்ததாக இல்லை என 22 வயதான காத்ரி தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடி ஆப் சரியான பாதுகாப்பு கொண்டிருக்கவில்லை என்ற தகவலை ஆப் வடிவமைப்பாளர்களுக்கு தெரிவிக்க முயன்ற காத்ரி, வடிவமைப்பாளர்களை தொடர்பு கொள்ள இயலாத சூழ்நிலையில் ஆப் பிழையினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்ததாக அவர் தெரிவித்தார்.

நரேந்திர மோடி ஆப்பை ஹேக் செய்து இந்த பிழையை கண்டறிந்த காத்ரி, ஆப்பின் பிழையை மட்டும் எடுத்துக் காட்ட விரும்பியதாக தெரிவித்திருக்கிறார். பிழையானது பயனர்களின் தகவல்களை யார் வேண்டுமானாலும் பார்க்கக் கூடிய அளவில் இருக்கிறது என்றாலும், இது மிகப் பெரிய பிழை இல்லை என தெரிவித்துள்ளார்.  

பயனர்களின் தகவல்கள் இணையத்தில் சேமிக்கப்பட்டிருப்பதால் இணைய இணைப்பு கொண்ட யார் வேண்டுமானாலும் பயனர்களின் தகவல்களை எளிமையாக பார்க்க முடியும் என காத்ரி எச்சரித்திருக்கிறார். தான் ஹேக் செய்த வழிமுறையை தெரிவித்தால் பயனர் தகவல்கள் ஹேக் செய்யப்படலாம் என்பதால் அதனை தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.

Similar News