செய்திகள்

சபரிமலை யாத்திரைக்கு சென்ற இரு பெண் பக்தர்கள் சாலை விபத்தில் பலி

Published On 2016-11-27 07:54 GMT   |   Update On 2016-11-27 07:54 GMT
சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு யாத்திரை சென்ற இரு பெண் பக்தர்கள் சாலை விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சில பெண்கள் சபரிமலையில் இருக்கும் ஸ்ரீ ஐயப்பனை தரிசிப்பதற்காக மாலை அணிந்து விரதம் இருந்தனர். யாத்திரையை முடித்துவிட்டு சபரிமலையில் இருந்து ஒரு ஜீப்பில் திருவனந்தபுரம் நோக்கி வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

இன்று அதிகாலை இங்குள்ள நிலக்கல் என்ற இடத்தின் வழியாக சென்றபோது, எதிர்திசையில் வந்த அரசு பஸ், அந்த ஜீப்பின்மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சரஸ்வதியம்மா(55), சரோஜினியம்மா(53) ஆகியோர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் உடன்பிறந்த சகோதரிகள் என்று தெரியவந்துள்ளது.

இதேவிபத்தில் காயமடைந்த கிரிஜா(52), அம்பிகா(50) ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இவ்விபத்து பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள சபரிமலை போலீசார், சரஸ்வதியம்மா மற்றும் சரோஜினியம்மா ஆகியோரின் பிரேதங்களை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனர்.

Similar News