செய்திகள்

பார்வையாளர் மாடத்தில் இருந்து குதிக்க முயன்றவரால் பாராளுமன்றத்தில் பரபரப்பு

Published On 2016-11-25 07:34 GMT   |   Update On 2016-11-25 07:34 GMT
பாராளுமன்ற மக்களவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தின்போது பார்வையாளர் மாடத்தில் இருந்து குதிக்க முயன்றவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுடெல்லி:

பாராளுமன்ற மக்களவை இன்று காலை கூடியதும் மத்திய அரசின் ரூபாய் நோட்டு ஒழிப்பு விவகாரத்தை மையப்படுத்தி, எதிர்க்கட்சிகள் வழக்கம்போல் அமளியில் ஈடுபட்டன. இதனால், அவையை 40 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

அப்போது, அவை நடவடிக்கைகள் தொடர்பான செய்திகளை சேகரிக்கும் நிருபர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியை அடுத்துள்ள பார்வையாளர் மாடத்தின் கைப்பிடி தடுப்பை தாண்டி, ஒருவர் அவையின் மையப்பகுதிக்குள் குதிக்க முயன்றார்.

இதை கவனித்துவிட்ட பாதுகாவலர்கள் சிலர் விரைந்துச் சென்று, அந்நபரை தடுத்துநிறுத்தி, பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றினர். இதனால், சிறிதுநேரம் மக்களவையில் சலசலப்பு ஏற்பட்டது. அந்த நபர் யார்? என்ன நோக்கத்துக்காக அவர் பாராளுமன்ற பார்வையாளர் மாடத்துக்கு வந்தார்? என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News