செய்திகள்

இன்று குழந்தைகள் தினம்: ஜவஹர்லால் நேரு நினைவிடத்தில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி அஞ்சலி

Published On 2016-11-14 03:46 GMT   |   Update On 2016-11-14 03:47 GMT
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி ஆகியோர் அவரது நினைவிடத்தில் இன்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
புதுடெல்லி:

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் மாதம் 14-ம் தேதி நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. சிறு குழந்தைகள் மீது நேரு வைத்திருந்த பாசத்தை பிரதிபலிப்பதாக இந்தநாள் கொண்டாடப்படுகின்றது.

இந்நிலையில், இன்று நேருவின் 127-வது பிறந்தநாளையொட்டி டெல்லியில் யமுனை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள சாந்தி வனம் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித் மற்றும் முன்னாள் மத்திய மந்திரிகள், காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மேலிட தலைவர்கள் ஆகியோரும் மலர்களை தூவி மரியாதை செலுத்தினர்.

பிரதமர் நரேந்திர மோடியும் நேருவின் பிறந்தநாளையொட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Similar News