செய்திகள்

சீன எல்லையில் உருவாக்கிய விமானப்படை தளத்தில் போர் விமானத்தை தரையிறக்கியது இந்தியா

Published On 2016-11-04 06:02 GMT   |   Update On 2016-11-04 12:50 GMT
அருணாச்சலப் பிரதேசத்தில் சீன எல்லையில் இந்தியா உருவாக்கிய புதிய விமானப்படை தளத்தில் போர் விமானம் தரை இறங்கி ஆய்வு மேற்கொண்டது.

புதுடெல்லி:

காஷ்மீரின் லே பகுதியிலும், அருணாச்சலப் பிரதேசத்தின் சீன எல்லைப் பகுதியிலும் இந்தியாவுக்கும் , சீனாவுக்கும் இடையே எல்லை தகராறு இருந்து வருகிறது. நேற்று லே பகுதியில் நீர்ப்பாசன கால்வாய் கட்டுமான பணியில் ஈடுபட்ட இந்திய தொழிலாளர்களை சீன ராணுவத்தினர் தடுத்தனர். உடனே இந்திய வீரர்கள் சென்று சீன ராணுவத்தினரின் அத்து மீறலை தடுத்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் சீனப்படை கார் அங்கிருந்து வெளியேறி தங்கள் நாட்டு எல்லைப்பகுதியில் நின்று கொண்டனர்.

இதற்கிடையே சீனாவின் மிரட்டலை சமாளிக்க அருணாச்சலப்பிரதேச மாநிலம் மெசுகா என்ற இடத்தில் இந்திய ராணுவம் நவீனமான முறையில் புதிய விமானப்படை தளம் அமைந்துள்ளது.

அதில் நேற்று விமானப் படையின் சி-17 ரக குளோப் மாஸ்டர் போர் விமானம் முதல் முறையாக தரை இறங்கி ஆய்வு நடத்தியது. இந்த விமானப்படை தளம் சீன எல்லைக்கு மிக அருகாமையில் 29 கி.மீ தொலைவில் உள்ளது.

இந்த விமானப்படை தளத்தின் மூலம் எல்லைப் பகுதிக்கு வீரர்களை அனுப்பி வைக்கவும், உணவுப் பொருட்களை சப்ளை செய்யவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் சீனாவின் மிரட்டலை சமாளிக்கவும் முடியும் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News