செய்திகள்

பழங்குடியினர் தான் நமது காடுகளைப் பாதுகாத்துள்ளனர்: தேசிய பழங்குடியினர் திருவிழாவில் பிரதமர் மோடி பேச்சு

Published On 2016-10-25 18:23 GMT   |   Update On 2016-10-25 18:24 GMT
பழங்குடியினர் தான் நமது காடுகளைப் பாதுகாத்துள்ளனர். வனங்களைப் பாதுகாப்பது என்பது பழங்குடியின கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும் என தேசிய பழங்குடியினர் திருவிழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்
புதுடெல்லி:

டெல்லியில், தேசிய பழங்குடியினர் திருவிழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாட்டில் உள்ள பழங்குடி மக்களின் கலாச்சாரம், பாராம்பரியத்தை பாதுகாக்கவும், அதனை வளர்க்கவும் மத்திய அரசு பழங்குடியினர் திருவிழாவை நடத்த முடிவு செய்தது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கில் நடந்த தொடக்க விழாவில், பிரதமர் மோடி குத்துவிளக்கேற்றி இவ்விழாவை  தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தலைநகர் டெல்லிக்கு வந்திருக்கும் பழங்குடியினரவை வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இது போன்ற பண்டிகை காலத்தில் நீங்கள் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. பழங்குடியினர் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆற்றிய பங்கு பெரிது.  பழங்குடியினர் தான் நமது காடுகளைப் பாதுகாத்துள்ளனர். வனங்களைப் பாதுகாப்பது என்பது பழங்குடியின கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய பழங்குடியினர் திருவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி,மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை மந்திரி ஜுவல் ஓரம், மத்திய சுற்றுச்சூழல் இணை மந்திரி அனில் மாதவ் தவே ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News