செய்திகள்

நக்சலைட்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த சத்தீஸ்கர் அரசு அழைப்பு

Published On 2016-10-23 16:17 GMT   |   Update On 2016-10-23 16:17 GMT
நக்சலைட்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்-மந்திரி ராமன் சிங் தலைமையிலான சத்தீஸ்கர் அரசு அழைப்பு விடுத்துள்ளது.
ராய்ப்பூர்:

நாட்டில் பீகார், சத்தீஸ்கர், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாவட்டங்களில் நக்சலைட்டுகளின் தாக்கம் அதிக அளவில் காணப்படுகிறது.

இந்த மாநிலங்களில் குறிப்பாக சில மாவட்டங்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் அளவிற்கு உள்ளது. இத்தகைய இடங்களில் அந்தந்த மாநில அரசு பல்வேறு கட்ட மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், நக்சலைட்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்-மந்திரி ராமன் சிங் தலைமையிலான சத்தீஸ்கர் அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து அம்மாநில உள்துறை அமைச்சர் ராம்சேவக் பைக்ரா கூறுகையில், ”பரஸ்பர உரையாடல் தான் ஜனநாயகத்தின் அடித்தள ஆகும். நக்சலைட்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு எப்பொழுதும் தயாராகவே உள்ளது.

சரணடைய தயாராக உள்ள நக்சலைட்டுகளை ஏற்றுக் கொள்ளவும் அரசு தயாராக உள்ளது. நக்சலைட்டுகள் பிரச்சனைக்கு நிரந்திர தீர்வு காண அரசு விரும்புகிறது” என்றார்.

Similar News