செய்திகள்

பிரதமர் மோடி 24-ம் தேதி வாரணாசி செல்கிறார்

Published On 2016-10-21 15:05 GMT   |   Update On 2016-10-21 15:05 GMT
பிரதமர் நரேந்திர மோடி வரும் 24-ம் தேதி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு செல்கிறார். அங்கு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
வாரணாசி:

பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் வரும் 24-ம்தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். டரேகா கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, வாரணாசியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் உர்ஜா கங்கா திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும் வாரணாசி-அலகாபாத் இரட்டை ரெயில் பாதை மற்றும் மின்மயமாக்கலுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மின்சாரம் மற்றும் டீசலில் இயங்கக்கூடிய சிறப்பு என்ஜினையும் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

இதுதவிர வாரணாசி கண்டோன்மென்ட்பகுதியை கடந்து செல்லும் பூலாவாரியா நான்குவழிச் சாலைக்கும் அடிக்கல் நாட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விழாவில் பங்கேற்க உத்தர பிரதேச கவர்னர் ராம் நாயக், முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் சுற்றுப்பயணத்தையொட்டி பலத்த பாதுகாப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா நடைபெறும் இடத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பா.ஜ.க.வினர் தூய்மைப் பணியை தொடங்கி உள்ளனர்.

Similar News