செய்திகள்

எல்லை பதற்றம் நீடிப்பு: அனைத்து மாநில அரசுகளும் பாதுகாப்பை பலப்படுத்த உளவுத்துறை எச்சரிக்கை

Published On 2016-09-30 12:55 GMT   |   Update On 2016-09-30 12:55 GMT
எல்லையில் நிலவும் பதற்றத்தால் அனைத்து மாநில அரசுகளும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
புது டெல்லி:

சர்வதேச எல்லையையொட்டி பாகிஸ்தான் பகுதியில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய வீரர்கள் கடந்த 28-ம் தேதி இரவு அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் தீவிரவாதிகளின் சில முகாம்களை ராணுவத்தினர் தாக்கி அழித்ததாகவும் இதில் சுமார் 55 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு எல்லைப் பகுதியில் சுமார் 1 மணி நேரம் தொடர் தாக்குதல் நடத்தியது.இதனால் எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்க வாய்ப்புகள் இருப்பதால் அனைத்து மாநில அரசுகளும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

உளவுத்துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Similar News