செய்திகள்

ஊழல் வழக்கால் அவமானம்: ஐ.ஏ.எஸ். அதிகாரி மகனுடன் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2016-09-27 09:30 GMT   |   Update On 2016-09-27 09:30 GMT
ஊழல் புகாரில் சிக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி மகனுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புது டெல்லி:

மத்திய அரசின் கம்பெனிகள் விவகார டைரக்டர் ஜெனரலாக பணியாற்றி வந்த பி.கே. பன்சால் தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக நடந்துகொள்ள ரூ.9 லட்சம் லஞ்சம் கேட்டதாக கடந்த ஜுலை மாதம் சி.பி.ஐ அதிகாரிகள் பன்சாலைக் கைது செய்தனர். மேலும், டெல்லியில் உள்ள பி.கே. பன்சாலின் அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.60 லட்சம் பணம், 60 வங்கி கணக்குகள் மற்றும் 20 ஆவணங்களையும் கைப்பற்றினர்.

லஞ்ச வழக்கில் பன்சால் கைதானதை தாங்கிக் கொள்ள முடியாமல் மனைவி சத்யபாலா (வயது 58), மற்றும் மகள் (வயது 27) இருவரும் ஜூலை மாதம் தற்கொலை செய்து கொண்டனர்.

சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பன்சால் கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி ஜாமீனில் வெளிவந்தார். இந்நிலையில் பன்சால் மற்றும் அவரது மகன் (வயது 28) இருவரும் நேற்றிரவு தங்களது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஊழல் வழக்கில் சிக்கியதே ஒட்டுமொத்த குடும்பத்தின் மரணத்துக்கும் காரணம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Similar News