செய்திகள்
திருப்பதியில் இன்று காலை தரிசனம் செய்வதற்காக காத்திருந்த பக்தர்கள் கூட்டம்.

திருப்பதியில் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்

Published On 2016-09-25 09:46 GMT   |   Update On 2016-09-25 09:46 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அலை மோதுகிறது. நேற்று அதிகாலை 3 மணி முதல் இன்று காலை 6 மணி வரை சுமார் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அலை மோதுகிறது. நேற்று அதிகாலை 3 மணி முதல் இன்று காலை 6 மணி வரை சுமார் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இவர்களில் சுமார் 44 ஆயிரத்து 330 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். இலவச தரிசனத்துக்கு 32 அறைகளில் காத்திருந்த பக்தர்கள் 14 மணி நேரம் கழித்து தரிசனம் செய்தனர்.

நடைப்பாதையாக வந்த பக்தர்கள் 7 அறைகளில் காத்திருந்து, 10 மணி நேரம் கழித்து தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். ரூ.300-க்கான சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 8 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.2 கோடியே 34 லட்சம் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News