செய்திகள்

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலம் அருகே செல்பி: சர்ச்சையில் மகாராஷ்டிரா அமைச்சர்

Published On 2016-08-05 14:26 GMT   |   Update On 2016-08-05 14:26 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலம் அருகே செல்பி எடுத்து மாநில அமைச்சர் பிரகாஷ் மேத்தா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ராய்காட்:

மகாராஷ்டிரா சாவித்ரி ஆற்றின் மேல் கட்டப்பட்டிருந்த பழமை வாய்ந்த பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் 13 உயிரிழந்தனர். மேலும் பலர் தேடப்பட்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பவ இடத்தை பார்வையிடச் சென்ற வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சர் பிரகாஷ் மேத்தா, அங்கு செல்பி எடுத்துக் கொண்டது குறித்தும், அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் கடிந்து கொண்டது குறித்தும் செய்திகள் பரவின.

இரண்டு பேருந்துகளும், பல வாகனங்களும் அடித்துச் செல்லப்பட்ட இடத்தில் ஒரு அமைச்சர் செல்பி எடுத்துக் கொண்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Similar News