உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை ஓமலூரில் அதிகபட்சமாக 11.2 மி.மீ பதிவு

Published On 2022-08-28 08:25 GMT   |   Update On 2022-08-28 08:25 GMT
  • சேலம் மாநகரத்தில் பல்வேறு பகுதி களில் மழை பெய்தது.
  • இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர்தேங்கியது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்கங்கே மழை பெய்து

வருகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் வெயில் வாட்டி வதைத்தது. மாலையில் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசியது. சேலம் மாநகரத்தில் பழைய பஸ்நிலையம், அம்மா பேட்டை, அஸ்தம்பட்டி, கொண்ட லாம்பட்டி, ஜங்ஷன், 4 ரோடு, செவ்வாய்ப்பேட்டை உள்பட பல்வேறு பகுதி களில் மழை பெய்தது. இதில் மழையில் சாக்கடை நீருடன் மழைநீருடன் கலந்து கால்வாயில் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் மாவட்டத்தில் காடையாம்பட்டி, எடப்பாடி,மேட்டூர், ஒமலூர், கெங்கவல்லி, ஆத்தூர், ஆகிய பகுதி களில் பலத்தமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர்தேங்கியது.

சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- ஓமலூர்- 11.2 மி.மீ, மேட்டூர் - 6.2, காடையாம்பட்டி- 6, சேலம்- 5.8, கெங்கவல்லி - 4, எடப்பாடி-1.2, ஆத்தூர்-1 மீ.மீ மழை பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News