உள்ளூர் செய்திகள்

நெல்லையில் ரூ.5.76 லட்சத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.


நெல்லையில் ரூ.5.76 லட்சத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

Published On 2022-06-13 09:28 GMT   |   Update On 2022-06-13 09:28 GMT
  • மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.
  • பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 280 மனுக்கள் பெறப்பட்டது.

நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.5.76 லட்சம் மதிப்பில் 25 மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.

இதில் ரூ.5.49 லட்சத்தில் நவீன செயற்கை கால்கள் 5 பேருக்கும், ரூ.26.88 ஆயிரம் மதிப்பில் பார்வை திறன் குறையுடையோருக்கான பிரேய்லி கை கடிகாரங்கள் 20 பேருக்கும் வழங்கப்பட்டது.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் குமாரதாஸ், ஆதிதிராவிடர் நல அலுவலர் தியாகராஜன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்பிரமநாயகம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

முன்னதாக பொதுமக்களிடம் இருந்து வீட்டுமனை பட்டா, சாலை வசதிகள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 280 மனுக்கள் பெறப்பட்டது.




Tags:    

Similar News