உள்ளூர் செய்திகள்

தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அங்கன்வாடி கட்டிடம்- விஜய் வசந்த் எம்.பி. அடிக்கல் நாட்டினார்

Update: 2022-08-18 12:51 GMT
  • 11. 85 லட்சம் ரூபாய் செலவில் அங்கன்வாடி கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது
  • சிசிடிவி கேமரா காட்சிகளை கண்காணிக்க விஜய் வசந்த் எம்.பி. தனது சொந்த செலவில் டிவி வழங்கினார்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டம், அழகப்பபுரம் பேரூராட்சி மயிலாடி பொட்டல்குளம் அரசு நடுநிலைப்பள்ளி அருகில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 11. 85 லட்ச ரூபாய் செலவில் அங்கன்வாடி கட்டுவதற்கான பூமி பூஜையை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் வட்டார தலைவர் காலபெருமாள் அழகப்பபுரம் பேரூராட்சி தலைவர் ஆண்ட்ரூஸ் மற்றும் அருண், ஆரோக்கியராஜன், பொட்டல்குளம் ஊர் நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம், கோட்டாரில் போக்குவரத்து காவல்துறை கண்காணிப்புக்கு புதிதாக போக்குவரத்து காவல் நிலையம் திறக்கப்பட்டது. அந்த அலுவலகத்தில் இருந்து சாலையில் அமைக்கப்பட்டுள்ள CCTV கேமரா காட்சிகளை கண்காணிக்க விஜய் வசந்த் எம்.பி. தனது சொந்த செலவில் டிவி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அருண், நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரத்தினகுமார், ஆரோக்கியராஜன், மற்றும் பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News