உள்ளூர் செய்திகள்

புளியஞ்சோலைக்கு மதுபாட்டில்களுடன் வந்த இளைஞர்களை திருப்பி அனுப்பிய வனத்துறை

Published On 2022-08-04 09:33 GMT   |   Update On 2022-08-04 09:33 GMT
  • அய்யாற்றின் நீர்வரத்து குறைந்ததால், ஆடிப்பெருக்கை முன்னிட்டு, பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் வனத்துறை அனுமதித்ததன் பேரில், புளியஞ்சோலை பகுதி களைகட்டியது.
  • வனவர் பிரியங்கா தலைமையில், வனப்பாதுகாப்பாளர் தங்கராஜூ, வனக்காவலர்கள் மணிகண்டன், கவாஸ்கர், சுகுமாறன் ஆகியோர் வனப்பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருச்சி :

ஆடி பெருக்கை முன்னிட்டு உப்பிலியபுரத்தை அடுத்துள்ள புளியஞ்சோலை களைகட்டியது.

சமீப காலமாக பெய்து வரும் தொடர்மழையால் புளியஞ்சோலை அய்யாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து காட்டாற்று வெள்ளமாக பாய்ந்ததால், வனத்துறையினர் நீரோட்டங்களில் குளிக்கவும், வனப்பகுதிக்குள் நுழையவும் தடைவிதித்திருந்தனர். அய்யாற்றின் நீர்வரத்து குறைந்ததால், ஆடிப்பெருக்கை முன்னிட்டு, பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் வனத்துறை அனுமதித்ததன் பேரில், புளியஞ்சோலை பகுதி களைகட்டியது.

பேருந்து, வேன், கார், மோட்டார்சைக்கிள் மூலம் வந்திருந்த பொதுமக்கள், நீரோட்டங்களில் குளித்தும், கூட்டம் கூட்டமாக அமர்ந்து கொண்டுவந்திருந்த உணவு வகைகளை வனப்பகுதியில், இயற்கை சூழலில் அமர்ந்து உண்டு மகிழ்ந்தனர். நாட்டாமடு பகுதியில், அபாயம் ஆழமானபகுதி என எழுதப்பட்ட பாறைகளுக்கு மேலிருந்துஆண்களும் பெண்களும், விபரீதங்களை அறியாமல்குதித்து விளையாடியது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

வனத்துறையை சேர்ந்த வனவர் பிரியங்கா தலைமையில், வனப்பாதுகாப்பாளர் தங்கராஜூ, வனக்காவலர்கள் மணிகண்டன், கவாஸ்கர், சுகுமாறன் ஆகியோர் வனப்பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மதுபாட்டில்களோடு புளியஞ்சோலைக்கு வந்தவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதும், மதுபோதையில் வந்தவர்களை வனத்துறையினர் திருப்பி அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News