உள்ளூர் செய்திகள்

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

Published On 2022-06-29 09:27 GMT   |   Update On 2022-06-29 09:27 GMT
  • திருச்சியில் பல்நோக்கு சமூகப்பணி மையம் சார்பில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
  • மது போதை மாற்று சிகிச்சை மைய மருத்துவர் ராமமூர்த்தி மருத்துவ சிகிச்சை குறித்து, மது இல்லாத சமுதாயத்தை உருவாக்கவும், தொடர் சிகிச்சை பின் விளைவுகள் குறித்தும் பேசினார்

திருச்சி:

திருச்சி பல்நோக்கு சமூக பணி மையத்தின் சார்பாக புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீரனூர் ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளயில் மது மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டது.

கீரனூர் பேரூராட்சி தலைவி ஜெயா மீரா ரவிக்குமார் தலைமை தாங்கினார். டி.எம்.எஸ்.எஸ்.எஸ். இயக்குனர் ஜான்செல்வராஜ் அனைவரையும் வரவேற்று நிறுவன செயல்பாடுகள் குறித்தும் புகையில்லா புதுயுகம் படைக்கவும் மாணவர்கள் தங்கள் பெற்றோரிடமும் கிராமத்து மக்களுக்கும் விழிப்புணர்வுடன் எடுத்துக் கூறினார்.

மேலும் மது போதை மாற்று சிகிச்சை மைய மருத்துவர் ராமமூர்த்தி மருத்துவ சிகிச்சை குறித்து, மது இல்லாத சமுதாயத்தை உருவாக்கவும், தொடர் சிகிச்சை பின் விளைவுகள் குறித்தும் பேசினார்.

பேரூராட்சி தலைவி தலைமை உரையில், இப்பகுதியில் வரும் காலங்களில் இது தொடர்பாக பகுதி மக்களுக்கு தொடர் விழிப்புணர்வு வழங்குவதாக கூறினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் சோபியா விக்டர், மது மற்றும் புகையிலையினால் ஏற்படும் தீமைகள், ேநாய்கள் பற்றி பேசினார்.

குடும்ப நல ஆலோசனை மையம் ஆலோசகர் பரமேஸ்வரி சமுதாய பாதிப்பு, குடும்ப பாதிப்பு குழந்தைகளின் எதிர்காலம் குறித்து பேசினார்.

மேற்பார்வையாளர் ஜஸ்டஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News