உள்ளூர் செய்திகள்

காவிரியில் வெள்ள பெருக்கு - பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு கூட்டம்

Published On 2022-08-05 09:44 GMT   |   Update On 2022-08-05 09:44 GMT
  • காவிரி நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகம் காரணமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் திருச்சியில் நடந்தது.
  • கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவிலான தண்ணீர் வரத்தால் கூழையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை நள்ளிரவில் கலெக்டர் மா.பிரதீப்குமார் அங்கு சென்று பார்வையிட்டார்.

திருச்சி:

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காவிரி நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகம் காரணமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் இன்று திருச்சி மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர்.க.மணிவாசன், தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் நித்தியானந்தம் மற்றும் வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை, மாநகராட்சி, தீயணைப்புத் துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் ஆலங்குடி மகாஜனம் ஊராட்சிக்கு உட்பட்ட கே.வி.பேட்டை பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவிலான தண்ணீர் வரத்தால் கூழையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை நள்ளிரவில் கலெக்டர் மா.பிரதீப்குமார் அங்கு சென்று பார்வையிட்டார். அந்த பகுதியில் வசித்து வருபவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள தேவாலயத்தில் தங்க வைக்கப்பபட்டனர். அவர்களிடம் பேசிய கலெக்டர், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொண்டார். மேலும் அவர்களுக்கு உணவு வழங்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Tags:    

Similar News