உள்ளூர் செய்திகள்

சாலை மோசமாக இருப்பதால் இலவச வாகன, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்

Update: 2022-08-15 09:24 GMT
  • பொம்மிகுப்பம் ஊராட்சியில் துண்டுபிரசுரம் வினியோகம்
  • விபத்துகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அருகே பொம்மிகுப்பம் ஊராட்சி ஓம்சக்தி நகர் பொதுமக்கள், இளைஞர்கள் பெயரில் வீடு, வீடாக துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. அதில் பொம்மிகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட ஒம் சக்தி நகருக்கு செல்லும் சாலையானது சுமார் 20 வருடங்களுக்கு முன்பு போடப்பட்டது.

அதன்பிறகு இந்த சாலையில் எந்தவித சீர மைப்பு பணிகளும் செய்யவில்லை. இதனால் மிகவும் மோச மாகவும், குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இருசக்கர வாக னத்தில் செல்பவர்களுக்கு இடுப்புவலி, மூட்டுவலி, முதுகுதண்டு நோய்கள் ஏற்படுவதுடன், கீழே விழுந்து விபத்துகளும்தொடர்ந்து நடக்கிறது.

மேலும் இருசக்கர வாகனங்களுக்கும் பழுது ஏற்படுகிறது. எனவே திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் இதனை கவனத்தில் கொண்டு கருணையோடு பரிசீலனை செய்து வாகனங்களுக்கு இலவச வாகன காப்பீடும், தனி நபர்களுக்கு விபத்து காப்பீடும் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று கூறப் பட்டுள்ளது.

சாலையை சீரமைக்க ஊர்பொதுமக்கள், இளைஞர்கள் வெளி யிட்டுள்ள இந்ததுண்டுபிரசுரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News