உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்

வளர்ச்சி திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

Published On 2022-06-23 10:08 GMT   |   Update On 2022-06-23 10:08 GMT
  • தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது
  • குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து கேட்டறிந்தார்.

வாணியம்பாடி :

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் வளையாம்பட்டு என்ற இடத்தில் உள்ள குப்பை கிடங்கிற்கு கொண்டு ெசன்று கொட்டி அங்கு தரம் பிரித்து, உரமாகவும், பிளாஸ்டிக் பொருட்களை தனியாகவும், இதர பொருட்களை தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. இவை முறையாக செயல்படுத்தப் படுகிறதா என நேற்று காலை வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லிபாபு, சுகாதார அதிகாரி செந்தில்குமார், சரவணன் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்தும், அங்கு சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டு இருந்த சுவர் வரைபடங்கள், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு இருந்த சுவர் விளம்பரம் துறையும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது நகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News