உள்ளூர் செய்திகள்

ஏலகிரி மலையில் உள்ள பழங்குடியினர் மாணவர்கள் விடுதியில் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

ஏலகிரி மலையில் கலெக்டர் ஆய்வு

Published On 2022-06-21 11:25 GMT   |   Update On 2022-06-21 11:25 GMT
  • அரசு பள்ளி மாணவர் விடுதியில் சோதனை.
  • உணவு தரம் குறித்து கேட்டறிந்தார்.

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பகுதியில் ஏலகிரிமலை ஊராட்சியில் அத்தனாவூர் பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவர் விடுதி மற்றும் உண்டு உறைவிடப் பள்ளியை நேற்று திருப்பத்தூர் கலெக்டர் அமர்குஸ்வாஹா திடிரென நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமானதாக உள்ளதா என்றும் அனைவருக்கும் உணவுகள் கிடைக்கிறதா என மாணவர்களிடையே கேட்டறிந்தார்.

மேலும் பழங்குடியினர் மாணவர்கள் விடுதியில் மாணவர்களுக்கு தயார் செய்யப்பட்ட உணவுகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் உண்டு உறைவிடப் பள்ளியில் இருப்பு வைக்கப்பட்ட உணவுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் பழங்குடியினர் நல திட்ட அலுவலர் ராஜஸ்ரீ, ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரி வேலன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News