உள்ளூர் செய்திகள்

தேரோட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் ஆவணித்திருவிழா தேரோட்டம்-திரளான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2023-09-01 08:58 GMT   |   Update On 2023-09-01 08:58 GMT
  • ஆவணித்திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • 10-ம் திருவிழாவான இன்று காலை 6 மணிக்கு அலங்காரத்துடன் அம்மன் தேரில் எழுந்தருளினார்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த அதன் உப கோவிலான வெயிலுகந்தம்மன் கோவில் ஆவணித்திருவிழா தேரோட்டம் இன்று காலையில் நடைபெற்றது.

இந்த கோவிலில் ஆவணித்திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து கோவில் சேர்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

10-ம் திருவிழாவான இன்று காலை 6 மணிக்கு அலங்காரத்துடன் அம்மன் தேரில் எழுந்தருளினார். பின்னர் தீபாராதனை நடைபெற்று தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்ட த்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரதவீதி வழியாக வலம் வந்தது நிலையம் வந்தடைந்தது.

விழாவில் கோவில் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ், பணியாளர்கள் ராஜ்மோகன், ஆவுடையப்பன், செல்வகுத்தாலம், பால்ராஜ், மாரிமுத்து, மணியம் நெல்லையப்பன் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். டி.எஸ்.பி. வசந்தராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில்முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News